பார்க்க வேண்டாம்
கேட்க வேண்டாம்
என்று நானும் நினைத்தாலும்
என் கண்கள் வேண்டி … என் நெஞ்சம் வேண்டி … வேண்டி வேண்டி கேட்கிறதே
சொற்கள் இல்ல மௌனம் பேச ..
ஆட்கள் இல்ல உலகம் தெரிய ..
என்ன மாயம் .. எந்த உலகம் இது …
தவறு செய்ய … நினைக்கவில்லை …
என் மனதை தடுத்தேன் … கேட்கவில்லை
வானவில்கள் என் கண்கள் தேடி ..
வந்து வந்து மறைகிறது …
பூக்கள் வாசம் முகர்ந்து கொண்டேன் ..
பூக்கள் பார்க்கும் பழக்கம் வளர்த்தேன் ..
தவறு … தவறு … நினைத்தல் தவறு …
சிருக …. சிருக… மனம் தொலைத்தல் தவறு …
தெரிந்து தொலைத்தேன் … தெரிந்தும் தொலைத்தேன் …
தினமும் … தினமும் .. உன் நினைவில் தொலைந்தேன் …
மீள நினைத்து …
பார்க்க மறுத்து …
கண் காண கடிவாளம் போட்டு முடித்தேன் …
மன கண்ணில் கடிவாளம் போட மறந்து …
மருகி … மருகி …மனமுடைந்தேன் …
அருமையான பதிவு!! தமிழில் ஒரு கவிதை அதுவும் உங்கள் தமிழ் எனக்கு மிகவும் பிடித்தது. வரும் காலங்களில் இப்படிபட்ட பதிவை எதிர்நோக்கி.. மக்களில் ஒருவன்🙂✍️✨👌
LikeLike
☺️☺️☺️thanks Simon… I love to write in Tamil… And will definitely publish more
LikeLiked by 1 person
You are the only tamil blogger on my list.😉 Happy that i follow you✨😊✍️
LikeLiked by 1 person
Wow! 😊
LikeLiked by 1 person
🙂
LikeLike