
வேர்கள் வழியில் ஊடுருவும் நீரைப்போல்,
ஐம் புலன்கள் வழியில் நுழைந்தது காதல்,
நுழைந்தது , நிறைந்தது , ததும்பியது …………
Translation:
Like water through the roots,
Love came in through my five senses,
Love came, grew, flourished…
Art by: Stella Im Hultberg
உயர்ந்த மதில்கள் என்னை சுற்றி,
உலவும் மனது என்னினுள்..
மறந்த உணர்வு என் மனதில் துளிரிட …
குழப்பம் நிறையும் எண்ணினுள் ..
துன்பம் வேண்டாம் …
இன்பம் வேண்டும் …
குழப்பம் வேண்டாம் …
அமைதி வேண்டும் …
இது தெரிந்தும் உலவும் என் மனதை..
சிறு பிள்ளை என்பதா?
இல்லை, கிள்ளை என்பதா?